தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளிவந்து உலகமெங்கும் மெகா ஹிட் அடித்த திரைப்படம் “எந்திரன்” .
அதுவரை தமிழ் சினிமா பாத்திரத்த கிராபிக்ஸ் காட்சிகளோடு மிக பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயரிந்திருந்தார். சிட்டி என்ற கதாபாத்திரத்தில் எந்திரனாக வரும் காட்சிகளில் சூப்பர்ஸ்டார் தன் உடலை வருத்தி நடித்தார் என்பதை மறுக்க முடியாது.
இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் “2008ம் ஆண்டில் எந்திரன் திரைப்படத்தின் போட்டோஷூட்டிற்காக நான் எடுத்த புகைப்படம். மக்கள் இதை சிஜி கிராபிக்ஸ் என நினைத்தார்கள், ஆனால் இது சிஜி கிராபிக்ஸ் இல்லை. படப்பிடிப்புக்காகத் சூப்பர்ஸ்டார் தன்னையே வருத்திகொண்டார். வெளியிடப்படாத இரண்டாவது புகைப்படத்தை இதோ உங்களுக்காக” என எந்திரன் திரைப்படத்தின் போது 10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.