நடிகர் அருண் விஜய்யின் “தடம்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிக்கும் திரைப்படம் “பாக்ஸர்” .
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவரால் நடிக்க முடியாத நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே முடிவு செய்துள்ளார்.
இப்படத்தை இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விவேக் இயக்குகிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக ‘இறுதி சுற்று’ புகழ் ரித்விகா சிங் நடிக்கிறார். அருண் விஜய் வியட்நாம் சென்று தீவிர பயிற்சி எடுத்துள்ளார் அருண் விஜய். தற்போது ஆன்லைன் நடிப்பு க்ளாஸ் மற்றும் தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார் மதியழகன். லாக்டவுன் முடிந்ததும் பாக்ஸர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Best wishes for your new career. @MathiyalaganV9 look from #Boxer @arunvijayno1 @vivekkumarknan @immancomposer@ritika_offl @DoneChannel1 @krishnanvasant @peterHeinOffl @ganesh_madan@stunnerSAM2 @hinasafaa234 @itsjosephjaxson pic.twitter.com/GBdrxDYGrX— Etcetera Entertainment (@EtceteraEntert1) June 24, 2020