மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி திரைப்படமான “தில் பேச்சாரா” நேரடியாக ஆன்லைனில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலிவுட் உலகில் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சமீபத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் நடித்து வெளியாக தயார் நிலையில் இருந்த படம் ‘தில் பேச்சாரா’. இந்த படம் மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தை கொரோனா எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கப்படும் என்பதே தெரியாத சூழல் உள்ளதால் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர். இப்படத்தின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் மிகப்பெரிய தொகை கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது. ஜூலை 24ம் தேதி ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
