தெறி, மெர்சல் என 2 மாபெரும் வெற்றி படங்களுக்கு பின் மீண்டும் இணைந்த தளபதி விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். உலகமெங்கும் 300 கோடி க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. பெண்களை கவுரவிக்கும் வகையிலும், கால்பந்து விளையாட்டை முன்னிலைப்படுத்தியும் எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் ரோபோ மகள் இந்திரஜா, பாண்டியம்மா கேரக்டரில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதும் தளபதி விஜய் யுடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் தனது நடிப்பால் மிரட்டியிருப்பார்.
Actor #RoboShankar and his daughter dance to the rhythm of #ThalapathyVijay‘s film as a tribute to him on his birthday. #HBDTHALAPATHYVijay pic.twitter.com/FLi3j2mrpw— Jaya TV (@JayaTvOfficial) June 22, 2020
இந்நிலையில் தளபதி விஜய் நேற்று தனது 46 வது பிறந்த நாளை கொண்டினார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் வித்தியாமான முறையில் வாழ்த்து கூறினார். வேறு எந்த நடிகருக்கும் இந்த அளவிற்கு வித்தியாசமான வாழ்த்துக்கள் வந்ததே இல்லை என்றே சொல்லலாம். அந்தவகையில் இந்திரஜா தனது அப்பா ரோபோ ஷங்கருடன் இணைந்து ‘யூத்’ படத்தில் மெகா ஹிட் பாடலான ‘ஆல்தோட்டா பூபதி’ பாடலுக்கு நடனமாடி தளபதி விஜய்க்கு டெடிகேட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெறித்தனமாக ரசிகர்களால் வைரலாகி வருகிறது.