தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். தனது 46 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். ரசிகர்கள், மாஸ்டர் படக்குழுவினர் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் என பலரும் தளபதி விஜய் க்கு வாழ்த்து தெரிவித்தனர். #HBDTHALAPATHYVijay என்ற ஹஷ்டக்கை உலகளவில் ட்ரெண்ட் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தளபதி விஜய் அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDTHALAPATHYVijay— Udhay (@Udhaystalin) June 22, 2020