V4UMEDIA
HomeNewsKollywoodஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்



நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்..

Image

நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம் நாங்கள் பல நாட்கள் காத்திருந்து தற்போது தான் ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது.

Raghava Lawrence Brother Elvin Introduced as Hero - YouTube

 ராகவேந்திரா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும், தற்போது நிலவிவரும் கொரோனா சூழ்நிலை முடிவுற்ற பின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அனைவரும் தங்களின் நல்லாசியையும், ஆதாரவையும் எனது தம்பிக்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்.

Happy birthday my brother Elviin, Here’s my birthday surprise for you. pic.twitter.com/zzp7Anzcl5— Raghava Lawrence (@offl_Lawrence) June 20, 2020

Most Popular

Recent Comments