மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்” . மலையாள திரையுலகின் பிரபல எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மாபெரும் வெற்றியை பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்ய போட்டிகள் நிலவி வருகின்றன. இப்படத்தின் இயக்குனர் சச்சி உடல்நலம் குறைவால் நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கோஷியாக நடிகர் கார்த்தியும், அய்யப்பனாக நடிகர் பார்த்திபனும் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
அய்யப்பனும் கௌஷியும்’பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன்.அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம் pic.twitter.com/9eWchtLte4
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 19, 2020