தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி “ரௌத்திரம்” படத்தில் வில்லன் மற்றும் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்களிடம் இன்னும் பிரபலமடைந்தார் .
பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம், மூடா்கூடம், ரௌத்திரம் என பல படங்களில் நடித்துள்ளார் சென்றாயன். 2014ம் ஆண்டு கயல்விழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய தம்பதிக்கு 4 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தற்போது மங்காத்தா அஜித் ஸ்டைலில் வெள்ளை நிற கோட் அணிந்து கூலிங் க்ளாஸ் போட்டு செம கெத்தாக போஸ் கொடுத்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.