V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனர் கோகுல் அடுத்த படம் கொரோனா குமார் ! ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

இயக்குனர் கோகுல் அடுத்த படம் கொரோனா குமார் ! ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

‘கொரோனா குமார்’ என்று பெயரில் உருவாகும் புதிய படத்தை “இதற்கு தானே ஆசைப்பட்டை பாலகுமாரா” புகழ் கோகுல் இயக்குகிறார்.

“கொரோனா குமார்” படத்தின் டைட்டில் பிரமோவையும் நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டைட்டில் பிரமோ “சினிமா வாலா” பிக்சர்ஸ் யூ டியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கோகுல் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் ‘ஜூங்கா’ , கார்த்தியை வைத்து “காஷ்மோரா” போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

Image

 கொரோனா குமார்” படத்தினை “சினிமா வாலா” பிக்சர்ஸ் சார்பில் சதீஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே குழந்தைகளை மையமாக வைத்து “சங்கு சக்கரம்” என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக மற்றும் ஆர்ட்டிஸ்ட் மானேஜராக மட்டுமின்றி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். “இதற்கு தானே ஆசைப்பட்டை பாலகுமாரா” , “சீறு” , “கொரில்லா” , “ஜூங்கா” , “கொலைகாரன்” போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். குறுகிய காலத்தில் இவ்ளோ பெரிய படத்தை தயாரிப்பதே இவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என சொல்லலாம். 

#CoronaKumar TitleLook 🥁🔊 Directed by @DirectorGokul 🎥 #CinemaWalaProductionNo2
MuchThanks🥰 @tkishore555 @santhosh_music @thinkmusicindia @PradeepERagav @Palanibalan1 @sidvipin @proyuvraaj @Riyaz_Ctc SplThanks🙏🏻 #MakkalSelvan @VijaySethuOffl 🤗😍 pic.twitter.com/r151nPLo9c— CINEMAWALA PICTURES (@cinemawalaoffl) June 17, 2020



இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா இல்லையா மற்றும் படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Most Popular

Recent Comments