கொரோனா தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறாமல் உள்ளது. கோடிகளை முடக்கி படம் எடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை தான் ரொம்பவே கேள்விக்குறியதாக மாறிவிட்டது. தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும் விதமாக பல நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது ஊதியத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்து பெற்றுக்கொள்வதாக அறிவித்து வருகின்றனர்.
இயக்குனர் ஹரி, நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், அருள்தாஸ், ஆர்த்தி, மஹத் ராகவேந்திரா போன்ற சிலரை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது சம்பளத்தை 20-30 சதவீதம் வரை குறைத்து கொள்வதாக கூறியுள்ளார்.