சென்னைக்கு சென்றால் எந்த தொழில் செய்தாலும் பிழைத்து கொள்ளலாம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்தது. வந்தாரை வாழவைக்கும் நகரம் என்றே சென்னையை கூறலாம்.
ஆனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. சென்னையில் இருந்து வெளியேறினால் உயிர் தப்பித்து கொள்ளலாம் என பலர் சென்னையை காலி செய்துவிட்டு குடும்பத்தோடு மூட்டை முடிச்சுகளுடன் தங்களது சொந்த ஊரை நோக்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் சென்னை குறித்து நடிகர் விவேக் கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில்,
“எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்!💪 ” என தெரிவித்துள்ளார்.
எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்!பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்!💪
— Vivekh actor (@Actor_Vivek) June 15, 2020