V4UMEDIA
HomeNewsBollywoodதனது இறப்பிற்கு முன் தாய்க்கு உருக்கமாக பதிவிட்ட சுஷாந்த் சிங் !

தனது இறப்பிற்கு முன் தாய்க்கு உருக்கமாக பதிவிட்ட சுஷாந்த் சிங் !

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று மதியம் 2 மணிக்கு மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.


Image


இந்த நிலையில் சுஷாந்த் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக செய்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது சிறு வயதிலேயே இறந்த தாயார் பற்றி மிக உருக்கமாக பதிவு செய்துள்ளார். தனது தாய் குறித்து சுஷாந்த் சிங் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Most Popular

Recent Comments