வசந்த பாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ஸ்ரீதரன் மரியதாஸன் தயரித்துள்ள திரைப்படம் ‘ஜெயில்’. ராதிகா சரத் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ரோபோ சங்கர், பிரேம்ஜி அமரன், பிரகாஷ் ராஜ், சூரி, ஆனந்த் பாபு, பாபி சிம்ஹா, அபர்நதி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜெயில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு உரிமையை பிரபல முன்னணி நிறுவனமான ‘சோனி செளத் மியூசிக்’ வாங்கியுள்ளது.
இந்த நிலையில் “ஜெயில்” படத்தின் முதல் பாடல் இன்று (ஜூன் 15) ம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். பிரபல பாடலாசியர் கபிலன் வரிகளில், தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடியுள்ள ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் நாளை வெளியாகவுள்ளது.
#kaathodusingletomm kaathodu kaathanen will be released by @dhanushkraja on his twitter handle tomm evening 6 pm …. 15th June @SonyMusicSouth @Vasantabalan1 @KaviKabilan2 @krikescc @aditiraohydari #jailsingle pic.twitter.com/A6kDjoMXPU— G.V.Prakash Kumar (@gvprakash) June 14, 2020