தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. சமூக வலைதளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.
நடிகை திரிஷா ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஆர்வத்துடன் ரசிகர்ககிடையே உரையாடுவர். சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் நடிகை திரிஷா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டீவீட்டில், ‘என் மனதிற்கு இந்த நேரத்தில் மறதி தேவைப்படுகிறது. இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற டிஜிட்டல் போதையிலிருந்து சில காலம் விலகி இருக்க உள்ளேன். வேறு காரணம் ஏதுமில்லை. விரைவில் உங்களை சந்திக்கிறேன். அனைவரும் வீட்டிலேயே பத்திரமாக இருங்கள். இதுவும் கடந்து போகும். அனைவரையும் நேசிக்கிறேன்’ என கூறியுள்ளார்.