மலையாள சினிமாவில் பிரபல நடிகர், விநியோகஸ்தர், இயக்குநருமான பிருத்விவிராஜ் சில மாதங்களுக்கு முன்பு “ஆடுஜீவிதம்” என்ற படத்தின் படபிடிப்பிற்காக ஜோர்டான் நாட்டிற்கு படகுழுவினருடன் சென்றார். திடீர் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் படக்குழுவினர் அங்கே 2 மாதங்களுக்கு மேல் தங்க வேண்டிய சுழல் ஏற்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின், நடிகர் பிருத்விராஜ் மற்றும் படக்குழுவினருடன் சிறப்பு விமானத்தில் கேரளாவுக்கு திரும்பினர். அப்போது முதல் தன்னைத் தனிமைப்படுத்தி கொண்டார் பிருத்விராஜ்.
இந்நிலையில் “ஆடுஜீவிதம்” படத்திற்காக முகம் முழுவதும் தாடி வளர்த்திருந்த பிருத்விராஜ் நீக்கிவிட்டார். கிளீன் சேவ் செய்த அவரது புதிய தோற்றத்தை அவரது மனைவி சுப்ரியா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஜிம் பாடி வித் நோ தாடி’ என பதிவிட்டுள்ளார்