ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அட்லீ இயக்கிய அனைத்து படங்களுமே மெகா ஹிட். பிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கருக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் அட்லீ தான்.
இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் ஜீவாவை வைத்து “சங்கிலி புங்கிலி கதவ திற” என்ற சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின், கைதி புகழ் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் அந்தகாரம் என்னும் படத்தை தயாரித்துள்ளார். விரைவில் OTT-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இயக்குனர் அட்லியின் உதவியாளர் இயக்க, நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை அட்லி தயாரிக்க உள்ளார். ஊரடங்கு முடிந்ததும் படத்தின் முழு விபரமும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.