கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டுள்ளார் தளபதி விஜய்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதும் குறிப்பாக சென்னையில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சினிமா மற்றும் பல தொழில்கள் முடங்கி உள்ளன முக்கியமாக தினசரி தொழிலர்கள் கடும் வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் “தளபதி விஜய்”யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வருகிறது. வருடாவருடம் அவரது ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக மக்களுடன் மக்களாக கொண்டாடி மகிழ்வர். ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவும் நிலையில், தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள், செய்தித்தாள் வாழ்த்துகள் ஆகியவற்றை அளிப்பதைத் தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தனது ரசிகர் மன்ற தலைவர் மூலமாக அனைத்து மன்றங்களும் செய்தி அனுப்ப சொல்லியுள்ளார்.