மக்களுக்காக நற்பணிகளில் திருவாரூர் ரஜினி மக்கள் மன்றம் !
நாடு முழுவதும் கொரோனவால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .பல துறைகளை சார்ந்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர் . குறிப்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் .
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தொடர்ந்து நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
8 .6 .20 அன்று நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் 108 ஓட்டுநர் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு மாஸ்க் (Washable) வழங்கினர்.
7 6 20 அன்று ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி VM சுதாகர் சார் அறிவுறுத்தலின் பேரில் திருவாருர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சி பத்தூர் செல்லூர் மக்களுக்கு ( Washable) மாஸ்க் வழங்கியுள்ளனர் ,