V4UMEDIA
HomeNewsகன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா 39 வயதில் காலமானார்!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா 39 வயதில் காலமானார்!

கன்னட திரையுலகின் அதிரடி ஹீரோக்களில் ஒருவரான சிரஞ்சீவி சர்ஜா தீடீர் மாரடைப்பால் இன்று காலமானார். நடிகருக்கு வயது 39. இவர் ஜெயநகரின் அசோக பில்லர் , அப்பல்லோ மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. நடிகரின் அகால மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Image
சிரஞ்சீவி சர்ஜா பிரபலமான திரைப்பட பிரமுகர்களின் குடும்பத்தில் பிறந்தார். மூத்த நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனும், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான அர்ஜுன் சர்ஜாவின் மருமகனும் ஆவார். 


Image

சிரஞ்சீவி அவரது மனைவி மேகனா ராஜை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.22 வயதான நடிகர் வாயுபுத்ரா படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் பணியாற்றினார். அவர் கடைசியாக சிவராஜுனா படத்தில் வெள்ளித்திரையில் நடித்தார்.

Image

ராஜா மார்த்தாண்டா, ஏப்ரல் ரணம், க்ஷத்ரிய, மற்றும் தீரம் போன்ற படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்திருந்தார், அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

பல பிரபலங்கள் ட்விட்டருக்கு சமூக வலை தளங்கள் மூலம் அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Shocked to hear about #chiranjeevisarja ‘s demise!!! Can never forget his smiling face💔💔💔my deepest condolences to the whole family !!— Priyamani Raj (@priyamani6) June 7, 2020

Deeply saddened and shocked to hear the passing away of #ChiranjeeviSarja. A young talent gone too soon. Condolences to his family and friends.— Anil Kumble (@anilkumble1074) June 7, 2020

Shocking and devastating news of Chiranjeevi Sarja passing away… can’t believe this:( Such a great talent and wonderful person gone too soon… My heart goes out to the family:( RIP— Vilas Nayak (@VilasNayak) June 7, 2020

Absolutely shocked by the untimely demise of #ChiranjeeviSarja Great talent, fine human being. Gone too young, you will be missed.— Danish Sait (@DanishSait) June 7, 2020

Most Popular

Recent Comments