V4UMEDIA
HomeNewsKollywoodஉதவி இயக்குனர்களுக்கு உதவிய நடிகர் ஆதி !

உதவி இயக்குனர்களுக்கு உதவிய நடிகர் ஆதி !

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி தொழிலர்கள் பலர் வேலை மட்டும் உணவின்றி தவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து கொடுக்கின்றனர்.






இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி இயக்குனர்களுக்கு “Let’s the Bridge” என்ற அமைப்பின் மூலம் சத்தமின்றி உதவி வருகிறார்.

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது,”கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உணவின்றி சிரமப்படும் உதவி இயக்குனர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்து ஒரு பட்டியல் உருவாக்கினோம். கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், நெசப்பாக்கம், வளசரவாக்கம் என சென்னையில் உள்ள சில பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளோம்” என கூறியுள்ளார்.

ஆதியின் இந்த செயலை சினிமாவில் பணிபுரியும் தொழிலர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகிறார்கள்.

.@AadhiOfficial distributed one-month food essentials for AD’s through his Lets Bridge team #CoronavirusPandemic #StaySafe pic.twitter.com/Mz7SXXX449— Sreedhar Pillai (@sri50) June 6, 2020

Most Popular

Recent Comments