தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக் ரோலில் சிம்புவும், ஜெஸ்ஸி ரோலில் த்ரிஷாவும் நடித்தார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
கொரோனா லாக்டவுன் நேரத்தில் சிம்பு – த்ரிஷாவை வைத்து மீண்டும் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். வெறும் 12 நிமிடங்கள் கொண்ட இந்த ஷார்ட் பிலிம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
இந்த நிலையில் நடிகர் சாந்தனு – மெகா ஆகாஷை வைத்து ‘ஒரு சான்ஸ் குடு’ எனும் வீடியோ பாடல் உருவாக்கியுள்ளார். பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். இப்பாடலின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இதன் முழு பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
#OruChanceKudu Song teaser 💛 ft. @akash_megha @KalaiActor & myself 😊
Super super glad to be associating with @menongautham sir 💛 for #OndragaOriginals composed by @singer_karthik written by @madhankarky shot by @manojdft https://t.co/Fle0KzRsAJ @OndragaEnt @dancersatz pic.twitter.com/XoYfmCsNAw— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) June 4, 2020


























