பட வெற்றிக்கு முன்னுரை எழுதும் ‘நான்தான் சிவா’ பாடல்கள் சோனி டிஜிட்டலில் வெளியானது. மேலும் இன்று மாலை 5 மணிக்கு , ஒரு லிரிகல் பாடல் சோனி டிஜிட்டலில் வெளியாகிறது.
அண்மையில் சோனி மியூசிக் வெளியிட்டிருக்கும் ‘நான்தான் சிவா’ படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பாடலுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பில் மகிழ் வில் இருக்கிறார்கள் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், இசையமைப்பாளர் டி .இமான், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர்.
‘ரேணிகுண்டா’ மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து ’18 வயசு’ மற்றும் விஜயசேதுபதி நடித்த ‘கருப்பன்’ போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும்
‘நான்தான் சிவா’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தைப் பற்றிப் பேசுமுன், படத்தின் பாடல்களுக்கான வெற்றி குறித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்.
“இதன் பாடல்கள் வெளியீடு சோனி ஆன்லைனில் வெளியாகியிருக்கிறது. பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே ரசிகர்களின் எண்ணிக்கை உயர ஆரம்பித்திருக்கிறது. அண்மைக் காலத்தில் மிகவும் ரசிக்கப் பட்டவையாக ‘நான்தான் சிவா’ படத்தின் பாடல்கள் மாறி இருக்கின்றன.
Here we Go!! Naan Than Siva – Pattaasa Antha Ponnu Video | D. Imman | Vinoth, Ashrita… https://t.co/G8qJNWFOvk via @YouTube @deepakmuziblue @yugabhaarathi @SonyMusicSouth @thirupathibroth @dirlingusamy #DImmanMusical
Praise God!— D.IMMAN (@immancomposer) June 3, 2020
டி .இமான் இசையில் யுகபாரதி வரிகளில் ‘மைனா’, ‘கும்கி’க்குப் பிறகு ஒரு முழுமையான ஆல்பமாக இந்தப் படத்திற்கான பாடல்கள் உருவாகியிருக்கின்றன.
படத்தில் “பட்டாசா அந்த பொண்ணு ஒரு பார்வை பார்த்தா”,
“அடியாத்தி கண்ணுல நூறு கோலம் போடுற”,
“ஏதோ ஏதோ ஆசை உனைப் பார்த்துப் பேச நிற்குதடா “,
” டர்ருன்னு..ஓட்டம் எடுடா மல்லுக்கட்ட”,
“ஐயையோ என்ன சொல்ல நான் தானே, உன்னை அப்படியே அள்ளிக்கிட்டுப் போவேனே”
என ஐந்து பாடல்கள் மற்றும் “வந்தது வந்தது காதல் என” என்று ஒரு சிறு பாடலும் உள்ளன. இவை கேட்ட அனைவருக்கும் பிடிக்கும் ரகத்தில் உள்ளன.பாடல்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, ‘நான் தான் சிவா’ படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பைக் கூட்டி வருகிறது.” என்கிறார்.
படத்தைப் பற்றி மேலும் கூறும்போது, “நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும், சந்திக்கும், கடந்து போகும் மனிதர்கள் நம் வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்துவார்கள் என்பது நமக்கே தெரியாது. அப்படி ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரைச் சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனது வாழ்வை வெவ்வேறு வகையில் திசை மாற்றிச் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரிக் கதை” என்றவர்,
“இதை காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் மூலம் கூறியிருக்கிறோம். படப்பிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடந்து முடிவடைந்து அடுத்தகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ” என்றார்.
.
கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக ‘உதயம் NH4’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு – என்.சுபாஷ் சந்திரபோஸ்
இயக்குநர் – ஆர்.பன்னீர் செல்வம்
ஒளிப்பதிவு – பி.ராஜசேகர்
சண்டைப் பயிற்சி – ராஜசேகர்
நடனம் – தினேஷ்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
பாடல்கள் – யுகபாரதி
இசை – டி.இமான்
கலை – சீனு
தயாரிப்பு மேலாளர் – ஜி.ஆர்.நிர்மல்
படத்தொகுப்பு – ஆண்டனி
இணைத் தயாரிப்பு – ஜி.ஆர்.வெங்கடேஷ்
‘பையா’, அஞ்சான், ரஜினிமுருகன்,மஞ்சப்பை, வழக்கு எண் 18/9, தீபாவளி, கும்கி, உத்தமவில்லன் போன்ற பல வெற்றிப் படைப்புகளை தந்த என்.லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் ‘நான்தான் சிவா’ படத்தைத் தயாரிக்கிறார்கள்