1978ம் ஆண்டு சி. ருத்ரையா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘அவள் அப்படித்தான்’. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இப்படத்தை பிரபல இயக்குநரான பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அதர்வாவின் பானா காத்தாடி, செம போத ஆகாதே மற்றும் பிளான் பண்ணி பண்ணணும் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபிரியா நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான், ரஜினி வேடத்தை பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.