Home News Kollywood மனோபாலா மற்றும் சிங்கமுத்து மீது புகார் அளித்த நடிகர் வடிவேலு

மனோபாலா மற்றும் சிங்கமுத்து மீது புகார் அளித்த நடிகர் வடிவேலு

நடிகர் வைகைப்புயல் வடிவேலு தனது சக நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது கடந்த 19 ஆம் தேதி புகார் அளித்துள்ள கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, வடிவேலுவிற்கும் சிங்கமுத்துவிற்கும் இடையே நில தொடர்பான பிரச்சனை இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் புது பிரச்சனை ஏற்படுத்துள்ளது.



Vadivelu files complaint against Manobala and Singamuthu! - Tamil ...



நடிகர் மனோபாலா ‘வேஸ்ட் பேப்பர்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்த போது வடிவேலு பற்றி அவதூறாக கருத்துகள் கூறியுள்ளார். இதனால் வடிவேலு நடிகர் சங்கத்திற்கு அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் படி புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.