‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTTல் நேரடியாக ரிலிஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து பல சின்ன பட்ஜெட் படங்கள் OTT-ல் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அந்த வரிசையில் அடுத்ததாக OTT-ல் வரவிருப்பது இயக்குனர் அட்லீ தயரித்துள்ள ‘அந்தகாரம்’ . இந்த படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலிஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இயக்குனர் அட்லி தயாரிப்பில் சுசி சித்தார்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘அந்தகாரம்’. இப்படத்தில் வினோத் கிஷன் மற்றும் ‘கைதி’ புகழ் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊரடங்கு காரணமாக படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் படத்தை OTT-ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.