V4UMEDIA
HomeNewsBollywoodபெண் தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த பிரபல நடிகர் ! குவியும் பாராட்டுகள்

பெண் தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த பிரபல நடிகர் ! குவியும் பாராட்டுகள்

அருந்ததி, நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு, ஆத்தாடு, தப்பாங், ஒஸ்தி, ஆகாடு, தேவி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் சோனு சூட். கொரோனா வைரஸால் நிலவும் ஊரடங்கில் உணவு மற்றும் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மும்பையிலிருந்து கர்நாடகா செல்ல தனது சொந்த செலவில் பஸ் வசதி செய்து கொடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், கேரளாவில் சிக்கியுள்ள 177 வெளிமாநில பெண் தொழிலாளர்களை தனது சொந்த ஊர்களுக்கு செல்ல தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். கொச்சியிலிருந்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வருக்கு செல்லும் இந்த விமானத்தில் செல்லும் தொழிலாளர்கள், அங்கிருந்து பேருந்து மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. ‘சொந்த கிராமங்களுக்கு மக்கள் பல கிலோ மீட்டர்கள் உணவின்றி நடந்து செல்வதை பார்க்கும்போது என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை’ என சோனு சூட் கூறியுள்ளார். இந்த மனிதநேயமிக்க செய்யலை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். படத்தில் வில்லனாக நடித்தாலும் ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

Most Popular

Recent Comments