V4UMEDIA
HomeNewsBollywoodஇயக்குனர் அட்லீ "மசாலா படங்களின் மேஜிக்மேன்" - கரண் ஜோஹர் பாராட்டு !

இயக்குனர் அட்லீ “மசாலா படங்களின் மேஜிக்மேன்” – கரண் ஜோஹர் பாராட்டு !

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்து வெளிவந்த திரைப்படம் ‘பிகில்’ . உலகமெங்கும் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ராயப்பன், மைக்கேல் என இரண்டு வேடங்களில் சிறப்பாக நடித்திருப்பார் தளபதி விஜய்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தென்னிந்திய திரைப்படங்கள் குறித்த ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “அட்லீ இயக்கிய தளபதி விஜய் யின் ‘பிகில்’ படத்தை நேசிக்கிறேன். அட்லீ “மசாலா படங்களின் மேஜிக்மேன்”. ‘ராஜா ராணி’, ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ உள்ளிட்ட அட்லீ இயக்கிய அனைத்து படங்கள் பார்த்து ரசித்துள்ளேன்”. மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது எனவும், அசுரன் படத்தில் தனுஷ் இயல்பாக நடித்துள்ளார் என தெரிவித்தார். கரண் ஜோஹர் பாராட்டுக்கு இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

.@karanjohar about @dhanushkraja & @Atlee_dir #Asuran #Bigil pic.twitter.com/f6SEr6OLNA— Captain Michael (@Barath_offl) May 29, 2020

I Love #Atlee just made a film called #Bigil in tamil, its a Huge Blockbuster. I have seen all 4 films of #Atlee & loved it. @Atlee_dir is the Magician of Masala Cinema. @BigilTamilMovie

@karanjohar pic.twitter.com/O9XHaplagu— #BIGIL (@BigilTamilMovie) May 30, 2020

Most Popular

Recent Comments