லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச். இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகன் நேற்று அளித்துள்ள பேட்டியில், ‘மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச்காக நான் சென்னை வந்த போது, தயாரிப்பாளர் அலுவலகத்தில் மாஸ்டர் டிரைலரை பார்த்தேன். மாஸாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்தது. தளபதி விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்’ என கூறியுள்ளார்.
.@MalavikaM_ – #Master Trailer will be completely Goosebumps! Its a Mad and Crazy Trailer. #Master @actorvijaypic.twitter.com/mRAQTmYxRZ— Mersal IMRAN ツ 🔥😇 (@Itz_MersalImran) May 29, 2020