V4UMEDIA
HomeNewsKollywoodஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் - அதிதி ராவ் இணைந்து பாடிய பாடல் விரைவில் !

ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் – அதிதி ராவ் இணைந்து பாடிய பாடல் விரைவில் !

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்தார். அதில் ‘தனது நடிப்பில் அடித்து வெளிவரவிருக்கும் ‘ஜெயில்’ படத்தில் தனுஷ் மற்றும் அதிதி ராவ் இணைந்து பாடிய ‘காத்தோடு’ பாடலை விரைவில் வெளியிடப்படும்’ என கூறியுள்ளார். இந்த டீவீட்டினால் தனுஷ் ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார்.

மேலும் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 43 வது படமான ‘கர்ணன்’ படத்தின் பின்னணி இசை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் கர்ணன் படத்தில் தனுஷ் ஒரு பாடலை எழுதி அவரே பாடி உள்ளதாகவும் இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளிவரும் எனவும், இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறியுள்ளார்.

How about the #jail single soon … #kaathodu sung by @dhanushkraja @aditiraohydari @KaviKabilan2 …. excited 😍 … updates soon …
— G.V.Prakash Kumar (@gvprakash) May 28, 2020

Most Popular

Recent Comments