‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் ராம் பாலா. சந்தானம், ஜீவா, சுவாமிநாதன், யோகி பாபு, மனோகர் என இவர் அறிமுகப்படுத்திய அனைத்து நடிகர்களுமே இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்துள்ளார்கள்.
இயக்குனர் ராம்பாலாவை ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு அழைத்து வந்த பெருமை நடிகர் சந்தானம் சேரும். முதல் பக்கத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இருவரும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பணியாற்ற, அதுவும் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அகில உலக சூப்பர்ஸ்டார் ‘மிர்ச்சி’ சிவா நடிக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார் ராம் பாலா. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது