பேட்ட படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து பணிபுரியும் படம் ‘அண்ணாத்த’ . இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பரோட்டா சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைப்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படபிடிப்பு வட இந்தியாவில் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக உள்ள ஊரடங்கு உத்தரவினால் தற்காலிகமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பட வேலைகள் முடிந்ததும் 2021ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியகும் என படகுழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் இறுதி சுற்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இசையமைப்பாளர் டி.இம்மானிடம் அண்ணாத்த படத்தின் பாடல்கள் குறித்து கேட்டதற்கு, ‘ரொம்ப மாஸ் ஆக வந்திருக்கு ! 3 பாடல்களுக்கு உண்டான வேலைகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 2 பாடல்கள் உள்ளது அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என கூறி படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருப்பதை உறுதி செய்தார். ஆரம்பகால சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பில்லா போன்ற படங்களை பார்த்து ரசித்து பிடித்ததால், அண்ணாத்த படத்தில் அதே பீல் உங்களுக்கு கொடுக்க காத்திருக்கிறோம்’ என கூறியுள்ளார்.
#Annaatthe #Song Details Reveled By #our #music #director #dimman #sir #5songInAnnaatthe #AnnaattheAudio #Annaatthesong #AnnaattheTrackList #Thalaivar169 by @Atlee_dir Direction #WaitingAnnaatthe #Flim #Movie #dream #come #true pic.twitter.com/32q9aHETzi— Sachin ullaallaa (@SachinUllaallaa) May 27, 2020