சந்தானம், ஹர்பஜன்சிங் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரும் திரைப்படம் ‘டிக்கிலோனா’. இப்படத்தினை கே.ஜே.ஆர் KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தவுடன் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். இன்று முதல் 3 நாட்கள் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளி வர இருப்பதாகவும் சந்தானம் தனது ரசிகர்களுக்கு மூன்று நாட்களில் டிரிப்பிள் விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.
இன்று முதல் லுக் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த லுக் தற்போது வைரலாகி வருகிறது.
Double trouble kelvi patrupeenga! Here’s triple trouble… The funniest trouble! 😂 #DikkiloonaFirstLooks – Look No.1 is here!#Dikkiloona #DikkiloonaGameStarts @iamsanthanam @karthikyogitw @thisisysr @SoldiersFactory @AnaghaOfficial @KanchwalaShirin @twitavvi @J0min pic.twitter.com/XyyAcYiR51— KJR Studios (@kjr_studios) May 27, 2020