தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மிக பிரபலமான நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் இந்தாண்டு வெளிவந்த இரண்டு படங்களும் மிக பெரிய அளவில் ஹிட் அடித்தன. சமீபத்தில் வெளியான ‘குரூப்’ படத்தின் இரண்டாவது லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் துல்கர் சல்மான் விரைவில் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க போவதாக அறிவித்திருந்தார். அப்படத்தை இயக்குனர் ஹனு ராகவபுடி தான் இயக்க போகிறாராம். துல்கருக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.