Home News Mollywood ஐயப்பனும் கோஷியும் ரீமேக் : முதன்முறையாக இணையும் ஆர்யா சசிகுமார் !

ஐயப்பனும் கோஷியும் ரீமேக் : முதன்முறையாக இணையும் ஆர்யா சசிகுமார் !

இயக்குநர் சாச்சி இயக்கத்தில் பிஜு மேனன் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மெகாஹிட்டன படம் ‘ஐயப்பனும் கோஷியும்’ . மலையாள பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் ஈகோ பற்றிய கதை தான். ஆனால் சுவாரசியமும் திரைக்கதையில் ஆளுமையும் செலுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பல மொழிகளில் கவனத்தை ஈர்க்க, பலர் இத்திரைப்படத்தை அந்தந்த மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி போட்டு உரிமையை வாங்குகின்றனர்.

தற்போது நடிகர் ஆர்யாவும் சசிகுமாரும் இணைந்து ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கில் நடிப்பார்கள் என்று தகவல்கள் வந்துள்ளது. பிஜு மேனன் கதாபாத்திரத்தில் சசிகுமாரும், பிருத்திவிராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யாவும் நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றது.