பிரபல தனியார் தொலைக்காட்சியின் VJ ரம்யா. இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். பெரும்பாலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது எப்படி என ஆரோக்கியமான விடியோகளை பகிர்வார். டிவி நிகழிச்சிகளில் மட்டுமின்றி நல்ல கதை அம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார். தற்போது தளபதி விஜய் யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘இந்த லாக்டவுனின் கடைசி வார்த்தை கொஞ்சம் மெதுவாக கடக்க போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும், மனமும் பாராட்ட விரும்புகின்றன. தற்போதுள்ள அனைத்திற்கும் நன்றியை தெரிவிக்க வேண்டும், மிக முக்கியமாக ஓவ்வொரு கணமும் முழுமையாக வாழ வேண்டும். கவலைப்படாதீர்கள், நான் நன்றாக இருக்கிறேன். ஒரு குட்டி இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பார்க்கலாம் என் அழகான மக்களே, அதுவரை உங்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
Going to take the last week of this lockdown a little slow and unplug .
My heart and mind needs to appreciate being live , have gratitude for all that is present and most importantly live every moment completely… https://t.co/MayPcHUgz1— Ramya Subramanian (@actorramya) May 24, 2020