இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் 2010-ம் ஆண்டு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜியன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
கார்த்திக் என்ற கேரக்டரில் சிம்புவும், ஜெஸ்ஸி என்ற கேரக்டரில் த்ரிஷாவும் அவளோ தத்துருபமாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தனர்.
VTV ரசிகர்கள் அவ்வப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் இயக்க வேண்டும் என கௌதம் மேனனுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், குறும்பட வடிவில் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டமாக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார்.
வெறும் 12 நிமிடங்கள் கொண்ட இந்த குறும்படத்தில் சிம்பு (கார்த்திக்) – திரிஷா (ஜெஸி) கேரக்டரில் நடித்து மீண்டும் பெரும் வரவேற்பை பெற்றது.
நேற்று இந்த குறும்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீட்டில் இருந்தபடியே எடுக்கப்பட்ட இந்த காட்சிகளை உருவாக்குவதில் இயக்குனர் எவ்வளவு உழைத்துள்ளார் என்பதை நீங்களே பாருங்கள் !