V4UMEDIA
HomeNewsKollywood17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'மன்மத ராசா' பாடலுக்கு நடமாடிய சாயா சிங் ! வைரலாகும்...

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மன்மத ராசா’ பாடலுக்கு நடமாடிய சாயா சிங் ! வைரலாகும் வீடியோ

2003-ம் ஆண்டு தனுஷ், சாயா சிங் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘திருடா திருடி’. இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பங்கள் பெரும் ஆதரவில் 200நாள் ஓடி மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. இசையமைப்பாளர் தீனா இசையில் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி வரை ஹிட்டடித்தன..குறிப்பாக ‘மன்மத ராசா’ பாடல் சமூக வலைத்தளங்கள் பெரிதும் இல்லாத அந்த காலகட்டத்திலயே பெரும் ஹிட் அடித்தது.

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாயாசிங் இணைந்து ஆடிய அந்த பாடலுக்கு ஆடாத கால்களே இல்லை என்று கூறலாம். நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது நடிகை சாயாசிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் பிறந்தநாள் ட்ரீட் இது. ஒரு வருடம் முன்பு சிவசங்கர் மாஸ்டரை சந்தித்த போது எடுத்தது” என தான் நடனமாடிய வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவுகிறது.

Most Popular

Recent Comments