V4UMEDIA
HomeNewsசிம்பிளாக நடைபெற்ற நடிகர் ராணாவின் நிச்சயதார்த்தம் !

சிம்பிளாக நடைபெற்ற நடிகர் ராணாவின் நிச்சயதார்த்தம் !

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்திய சினிமாவில் பிரபலமான நடிகரனார் ராணா டகுபதி. கடந்த வாரம் தன் காதலி மிகீகா பஜாஜ் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் விரைவில் அதிகாரப்பூர்வமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (மே 21) மிகீகா பஜாஜ் மற்றும் ராணா இருவரின் நிச்சயதார்த்தம் அவர்களது வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ஊரடங்கு உத்தரவினால் சிம்பிளாக நடைபெற்றது. விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிப்பு வெளியாகும்.

தெலுங்கில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வரும் ராணா, அவருடைய திருமண நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

And it’s official!! 💥💥💥💥 pic.twitter.com/0J3jBeEaep— Rana Daggubati (@RanaDaggubati) May 21, 2020

Most Popular

Recent Comments