V4UMEDIA
HomeNewsKollywoodவிறுவிறுப்பாக நடைபெறும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் !

விறுவிறுப்பாக நடைபெறும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் !

சிபிராஜ் மற்றும் நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கபடதாரி’. கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்துக்காக லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இப்படத்தை சத்யா மற்றும் சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகை பூஜா குமார், நாசர், மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து இப்படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது.

Post Production பணிகளில் தீவிரம் காட்டியுள்ள படக்குழு டப்பிங் வேலைகளை விறு விறுப்பாக முடித்து வருகின்றனர். நாசர், ஜெயபிரகாஷ் போன்ற நடிகர்கள் தங்கள் டப்பிங்கை முடித்துவிட்ட நிலையில் தனஞ்ஜெயன் தனது டப்பிங்கை நேற்று முடித்துள்ளார். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் படம் வெளியாகும் என படகுழுவினர் அறிவித்துள்ளனர்.

Just finished dubbing for my scenes in #Kabadadaari , an important cameo role under @Directorpradeep ‘s direction 👍👍👍 pic.twitter.com/qSsbAay2Qj— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) May 19, 2020

Most Popular

Recent Comments