ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா என பல மெகாஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் லிங்குசாமி. இயக்குனராக மட்டுமின்றி சில வருடங்களாக தரமான படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து அவர் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘நான் தான் சிவா’ என்ற படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார். இப்படத்தை
ஆர். பன்னீர்செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ரெனிகுண்டா, கருப்பன் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார். லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஷின் மகன் வினோத் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவர் ‘கோலிசோடா 2’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா ஷெட்டி நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொப்பு பணிகளை மேற்கொள்கிறார். மேலும், டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
#NaanThaanSiva -Tracklist!#DImmanMusical
Praise God!
Audio on @SonyMusicSouth
Will be live on all digital platforms by 4pm today!
Stay glued!@thirupathibroth @dirlingusamy #Deepakblue @aalaapraju #SantoshHariharan @shreyaghoshal #PriyaSubramanian #Shenbagaraj @jiththin pic.twitter.com/8OfBRgTqnM— D.IMMAN (@immancomposer) May 20, 2020