அருந்ததி, நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு, ஆத்தாடு, தப்பாங், ஒஸ்தி, ஆகாடு, தேவி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் சோனு சூட். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து கர்நாடகா செல்ல தனது சொந்த செலவில் பஸ் வசதி செய்து கொடுத்து உதவியுள்ளார்.
இந்நிலையில் இரண்டு மாநில அரசுகளிடமும் முறையான அனுமதி பெற்று தனது சொந்த செலவில் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார். மும்பையில் உள்ள தனது ஓட்டலை கொரோனா பணிசெய்யும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார். இதுமட்டுமின்றி புலம்பெயர்ந்து மும்பையில் தங்கி இருக்கும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு பொருளை வழங்கி வருகிறார். இப்போது மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பிற மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து ஏற்பாடு செய்துள்ளார் சோனு சூட். இதற்காக உ.பி அரசிடம் அனுமதியும் வாங்கியுள்ளார். சோனு சூட்டின் இந்த மனிதநேயமிக்க செய்யலை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அவர் ‘என்னை பொறுத்தவரை இது ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். இந்த தொழிலாளர்கள் தங்கள் வீட்டை விட்டு இப்படி தெருக்களில் அலைந்து திரிவதை பார்க்கையில் என் மனம் வேதனையடைகிறது . கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன்’ என சோனு சூட் தெரிவித்துள்ளார்.
In his continuous efforts of sending migrant workers to their homes, our great actor @SonuSood has sent another group of workers to UP & Bihar today.
You are the real Hero & inspiration to many bro. No words to describe ur immense contribution during these tough times#SonuSood pic.twitter.com/Inbrt3KjE0— Rahul Trehan 🇮🇳 (@imrahultrehan) May 18, 2020