லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது ‘மாஸ்டர்’ இறுதிக்கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாஸ்டர் படத்தினை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியிடப்படும் என்று தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் அதற்கு பதிலளித்துள்ளார்.
‘மாஸ்டர் ட்ரைலரை இதுவரை ஆறு முறை பார்த்து விட்டேன். ட்ரைலர் மரண மாஸாக உள்ளது. ட்ரைலர் விரைவில் வெளியிடப்படும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சய
#Arjundas about the much awaited #Master Trailer 😎 @actorvijay pic.twitter.com/JU9Ev25d9E— Vijay Fans Team ™ (@VijayFansTMOff) May 18, 2020
மாக சொல்லமுடியும். எப்போது ட்ரைலர் ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். சரியான தருணத்தில் ட்ரைலரை தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள். அதில் வரும் ஒரு டயலாக் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். எனவே ட்ரெய்லர் வெளியாகும்வரை காத்திருப்போம்’ என கூறியுள்ளார் .