நடிகை ராஷ்மிகா மந்தனா டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இந்த ஊரடங்கு நேரத்தில் ரசிகர்களுடன் பேசி வருகிறார். இந்நிலையில் டிவிட்டரில் நேற்று ரசிகர்களுடன் பேசிய போது பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது என்று கேட்டதற்கு ‘கில்லி’ என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “கில்லி என்று நினைக்கிறேன். என்னுடைய அப்பாவுடன் சென்று பார்த்தேன். சரியான பதில் வேண்டுமென்றால் என்னுடைய தந்தையிடம் தான் கேட்க வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு சினிமா என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் நடிகையான பிறகு அவர் படம் பார்ப்பதில்லை” என பதிவிட்டுள்ளார். ராஷ்மிகா தளபதி விஜய் யின் மிகப்பெரிய ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
Gilli I think. My dad took me. 🐒 I don’t know you should ask him- He was a hugggeee movie buff back in the day. Now when I am an actor he’s not. 🙄😒— Rashmika Mandanna (@iamRashmika) May 16, 2020