Home News Kollywood மனைவியை வைத்து குறும்படம் இயக்கிய சாந்தனு பாக்கியராஜ்! குவியும் பாராட்டுக்கள் !

மனைவியை வைத்து குறும்படம் இயக்கிய சாந்தனு பாக்கியராஜ்! குவியும் பாராட்டுக்கள் !

தற்போது யூடியூபில் சாந்தனு பாக்யராஜ் இயக்கிய கொஞ்சம் கொரோனா, நிறைய காதல் என்ற குறும்படம் வைரலாகி வருகிறது. இந்த குரும்பப்படத்தில் சாந்தனு பெண்களின் கஷ்டத்தை எடுத்துரைத்திருக்கிறார். வீட்டில் பெண்கள் எவ்வளவு வேலைகளை செய்கிறார்கள் என்பதை அவரது பாணியில் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் சாந்தனு.

இதில் சாந்தனுவின் மனைவி மற்றும் தொகுப்பாளியான கிகி கணவன் போலவும், சாந்தனு மனைவி போலவும் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கிகி கேட்கும் உணவுகளையும் சமைத்துக் கொடுத்து விட்டு, வீட்டு வேலைகளையும் செய்து முடிக்கிறார் சாந்தனு. அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு அமரப் போகும் நேரத்தில் அவரிடத்தில் ஒரு கிரீன் டீ கேட்கிறார் கிகி.

திடீரென்று கனவிலிருந்து விழிக்கிறார் சாந்தனு. அப்பொழுது தான் அவருக்குத் தெரியவருகிறது இவ்வளவு நேரம் தான் கண்டது அனைத்தும் கனவு என்று . மேலும் கனவே இவ்வளவு பயங்கரமாக இருந்தால் நிஜத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு எப்படி இருக்கும் என்ற கருத்தினை இந்த குறும்படத்தின் மூலம் புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்.