V4UMEDIA
HomeNewsBollywoodநடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த அபிஷேக் பச்சன் !

நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த அபிஷேக் பச்சன் !

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னும் மூன்று மாதத்துக்கு திரையரங்குள் திறக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் என அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் (OTT) ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. தமிழில் முதல் படமாக இயக்குநர் ஜேஜே பிரட்ரிக் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் பிரதாப்போத்தன் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29ஆம் தேதி OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

சூர்யாவின் இந்த முடிவிற்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆதரவு தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரிக்கும் நாம் தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாகியிருக்கும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் நம் போக்கினை மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்றும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த முடிவைப் போல பாலிவுட்டிலும் பல படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாவதற்கு காத்திருக்கின்றன என்றும் தெரிவித்தார். அபிஷேக் பச்சனின் தந்தை அமிதாப் பச்சனும் ஆயுஷ்மான் குரானா நடித்த குலாபு சிதபு திரைப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

All the very best my friend.— Abhishek Bachchan (@juniorbachchan) May 15, 2020

Most Popular

Recent Comments