V4UMEDIA
HomeNewsKollywoodசென்னை காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை ஆண்ட்ரியா !

சென்னை காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை ஆண்ட்ரியா !

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் தான் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. சென்னையில் தினமும் குறைந்தது 400 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க மார்ச் 24 லிருந்து மே 17ம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தல்ப்படி வீட்டில் அனைவரும் பொறுப்புடன் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு மக்களுக்காக உழைத்து வருகின்றனர் காவல்துறை அதிகாரிகள், டாக்டர்கள், நர்ஸ் மற்றும் தூய்மை பணியாளர்கள்.

இந்நிலையில் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல்துறைக்கு பாட்டு பாடி தனது ஸ்டைலில் நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள அவர்
‘நீங்கள் நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள். எனவே, நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தயவுசெய்து நம்பிக்கையை இழக்காதீர்கள் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நம்புகிறோம், காத்திருப்போம்’ என காவல்துறையினரின் சேவையை பாராட்டியுள்ளார்.

Most Popular

Recent Comments