பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படமும் திரையரங்கிற்கு வாராமல் நேரடியாக OTT பிளாட்பார்மில் ரிலீஸாக உள்ளது.
அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘பெண்குயின்’. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக கர்ப்பிணி பெண் வேடத்தில் நடிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் தயாரிப்பு வேலைகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்குயின் படத்தை நேரடியாக OTT பிளாட்பார்ம்களில் விற்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.