V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர்ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' பொங்கல் 2021 ரிலீஸ் ! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ பொங்கல் 2021 ரிலீஸ் ! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆகஸ்ட் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 40 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்தினால் மட்டுமே படம் நிறைவடையும் என்ற நிலையில், தற்போது படத்தின் வெளியிட்டு தேதியை பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளது தயாரிப்பு தரப்பு. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

2019 பொங்கலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படமும், அஜீத்தின் ‘விசுவாசம்’ திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களுமே வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என குறிப்பிடத்தக்கது.

#AnnaatthePongal2021#அண்ணாத்தபொங்கல்2021@rajinikanth @directorsiva @immancomposer @KeerthyOfficial @prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/PY5qldztmC— Sun Pictures (@sunpictures) May 12, 2020

Most Popular

Recent Comments