V4UMEDIA
HomeNewsKollywoodசினிமாவில் 18 ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தனுஷிற்காக 1 மில்லியன் டிவீட்ஸ் செய்து அசத்திய ரசிகர்கள்...

சினிமாவில் 18 ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தனுஷிற்காக 1 மில்லியன் டிவீட்ஸ் செய்து அசத்திய ரசிகர்கள் !

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது முதல் படம் “துள்ளுவதோ இளமை”, இந்த படம் 2௦௦2 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி வெளியானது .இந்த படத்தில் நடித்த பொழுது நடிகர் தனுஷ் சிறு பையன் என்று எல்லாராலும் கருதப்பட்டார். நிறைய பேர் தனஷ் அவர்களின் தோற்றத்தை கேலி செய்தனர். இருந்தாலும் மனம் தளராது தனது நடிப்பு திறமையை வளர்த்து கொண்டு, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். நிறைய ஹிட் படங்கள் தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தார். நடிப்போடு நிறுத்தாமல் நிறைய பாடல்களை பாடினார் , படங்களை தயாரித்தார் நிறைய இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் வாய்ப்புகள் அளித்து வருகிறார்.

சமீபத்தில் அதிகமான பாடல்களை எழுதிய நடிகர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். கோலிவுட் மட்டும் அல்லாமல் பாலிவுட்டிலும் நடித்துள்ளார், தற்போது ஹாலிவுட்டில் “தி எக்ஸ்ட்ராடினேறி ஜர்னி ஆப்ஃ ஃபகிர்” என்ற படத்தில் நடித்து உள்ளார் தனுஷ் சமீபத்தில் தனது நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் “ரவுடி பேபி” என்ற பாடலின் வீடியோ யூட்யூப் சேனலில் 840 மில்லியன் வியூஸ் வந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இப்படி தொடர்ந்து சாதனை புரிந்து வரும் தனுஷின் முதல் படமான துள்ளவதோ இளமை படம் ரிலீஸ் ஆகி நேற்றோடு 18 வருடங்கள் ஆகின்றது . இந்த தருணத்தை தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் #18YrsOfKTownPrideDHANUSH என்ற டேக் ஒன்றை பயன்படுத்தி ட்ரெண்ட் செய்தனர் . மேலும் கலைப்புலி S தாணு , செல்வராகவன் , பாலாஜிமோஹன், பிரசன்னா, மாரி செல்வராஜ் , கார்த்திக் நரேன் , துரைசெந்தில்குமார் ஆகியோர் தனுஷ் ரசிகர்களுக்காக COMMON DP ஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர் . #18YrsOfKTownPrideDHANUSH என்ற டேகில் ஒரே நாளில் 1 மில்லின் ட்விட்ஸ் செய்து அசதியுள்ளனர் தனுஷ் ரசிகர்கள் .

#18YrsOfKTownPrideDHANUSH

Tag Reached 1M Tweets in 24 hours!@dhanushkraja pic.twitter.com/we0BK7kvho— Ramesh Bala (@rameshlaus) May 10, 2020

#18YrsOfKTownPrideDHANUSH

Tag Reached 1M Tweets in 24 hours

Massive effort from #Dhanush fans! pic.twitter.com/vcdYaE0jUe— Kaushik LM (@LMKMovieManiac) May 10, 2020

Most Popular

Recent Comments