தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் கணவன் மனைவி போலவே வெளிநாடுகள் உட்பட பல இடங்களுக்கு ஷூட்டிங் இல்லாத ஓய்வு நேரத்தில் ஒன்றாக சென்று வருகிறார்கள். விரைவில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நயன்தாரா கையில் ஒரு அழகான குட்டி பெண் குழந்தையை வைத்துள்ளார். ‘எனது வருங்கால குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் நயன்தாராவுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்’ என கூறியுள்ளார்.